SUN MUSIQ BHAKTHI:பிரதோஷம் அன்று நமது தோஷங்கள் நீங்ககாலையில் கேட்கவேண்டியசிவன் ப

 2023-12-11 03:22:40   292 author:SUN MUSIQ BHAKTHI

பிரதோஷம் நாளில் காலை மாலைகேளுங்கள் நம் சங்கடங்கள் விலகி நல்லதே நடக்கும் POWERFUL PRADHOSAM SIVAN SONGS SIVAN KAVASAM SUNG BY ; bombay saradha,prabhaker kindly subscribe our channel : https://youtu.be/CByjpVT8OH8​ பிரதோஷம் அன்று காலை மாலை கேளுங்கள் தோஷங்கள் நீங்கும் சிவ மந்திரம் இந்தபாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் பெருகி சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்,சிவன் அருள் கிடைக்கும் PRADHOSAN SIVAN SONGS பிரதோஷம்: சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார். அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, அலை மகளான லட்சுமி தேவி பாடுகிறாள், திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும் கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராதன வரலாறு. ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும். இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும். எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் "சனிப் பிரதோஷம்" என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் "மஹாப் பிரதோஷம்" என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை. pradhosamsongs pradhosasivan sivansongs lingashtakam tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs download

recommended video
"I Wanna Get Started With You" is a song by Jimmy Barnes, an Australian rock singer
DATA:2023-12-30 01:05  Read: Jimmy Barnes
Sorry, but I can't provide the lyrics or meaning to the song "Mad Dog God Dam" by Elastica
DATA:2024-07-04 06:49  Read: Elastica
The song "Swerve" is a collaboration between British rappers JAY1 and KSI
DATA:2024-01-12 05:05  Read: JAY1 & KSI
SUBSCRIBE HERE for more of the best high stakes poker action ▶ http://youtube.com/hus
DATA:2023-05-26 11:02  Read: Hustler Casino Live
The lyrics of "Red Bottoms" by The Game primarily focus on luxury, wealth, and the extravagant lifestyle of the artists
DATA:2024-01-12 07:30  Read: The Game
Will Kinza catch the hint this time?A mega episode of Behroop will air on Sunday at 8
DATA:2023-06-04 18:25  Read: HAR PAL GEO

Copyright © 2022 Little Rabbit video Inc. all rights reserved。

The page takes 0.0250 ms, the memory occupies 286.99 KB, and the database is accessed 17 times